செந்தோசா கடற்கரைகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு கட்டுப்பாடுகள் எளிமை!

Crowds head to Sentosa beaches, ahead of online booking requirement for visitors
(Photo: TODAY)

செந்தோசா கடற்கரைகளுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் இனி அதற்காக முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.

கடற்கரைக்கு செல்ல விரும்புவோர் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் இனி முன்பதிவு செய்யவேண்டியதில்லை.

சிங்கப்பூரில் கடல் பயணத்தை அனுபவித்தது உண்டா? – 24 பேர் செல்லும் படகு வாடகை – மீன், BBQ என மகிழ்ச்சியாக கழிக்கலாம்!

சிங்கப்பூரில் எளிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ஏற்ப இது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சோங் (Tanjong), பலவான் (Palawan) மற்றும் சிலோசோ (Siloso) கடற்கரைகளுக்கு இனி முன்பதிவு செய்யாமல் வருகையாளர்கள் செல்ல முடியும்.

இதனை சென்டோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (SDC) இன்று (மார்ச் 14) ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

கடற்கரைகளில் அதிகபட்சமாக 5 பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே மக்கள் ஒன்றுகூடலாம். பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!