நடைபாதையில் திடீரென பாய்ந்த கார்…பாதசாரி இருவரை தாக்கியது – ஓட்டுநர் கைது

அப்பர் செரங்கூனில் நேற்று (டிசம்பர் 29) கார் ஒன்று சாலையிலிருந்து கட்டுப்பாட்டை மீறி திடீரென நடைபாதையில் பாய்ந்து, ​​பாதசாரிகளைத் மோதியது.

இந்த சம்பவத்தின் காணொளியை Raven Qiu என்ற பயனர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், அது ஒரு கடையின் சிசிடிவி காட்சிகளை சித்தரிக்கிறது.

சிங்கப்பூரில் புதிய 13 தொற்று பாதிப்புகளில் 9 பேர் Work Permit பெற்றவர்கள்!

அந்த காணொளியில் அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது, அதாவது வாடிக்கையாளர்கள் நடந்து செல்வது, கடை ஊழியர் கட்டிலில் அமர்ந்து அவரது தொலைபேசியில் பார்த்து கொண்டிருப்பது எல்லாம் சாதாரணமாக தோன்றுகிறது.

நடைபாதையில் பாய்ந்த கார்

அச்சமயம், திடீரென்று ஒரு கருப்பு கார் நடைபாதை மீது ஏறி லாம்போஸ்டில் மோதி நிற்பதை காணமுடிகிறது.

இந்த சம்பவத்தில், முன்னால் நடந்து செல்லும் ஒருவரை வாகனம் தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், நடந்து செல்லும் பெண் ஒருவர் பக்கவாட்டில் உள்நோக்கிச் மோதி தள்ளப்படுவதையும் காணமுடிகிறது.

இருப்பினும் அவர் காயமின்றி எழுந்து கடைக்குள் நடப்பதையும் காணமுடிகிறது.

ஓட்டுநர் கைது

அன்று மாலை 5:07 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் 40 வயதான ஆண் பாதசாரி ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவாக இருந்தார்.

பின்னர், 34 வயதான ஆண் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…