சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…!

Singapore starts Covid-19 vaccination
Senior staff nurse first in Singapore to receive Covid-19 vaccination shot (Photo: MCI)

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போடும் திட்டம் இன்று (டிச. 30) காலை முதல் தொடங்கியது.

முன்பு அறிவித்தது போல முதலில் தேசியத் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் (NCID) தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதிகாரிகளிடம் இருந்து காரில் தப்பிக்க, 8 வாகனங்கள் மீது மோதிய ஆடவர் கைது

மூத்த சுகாதார செவிலியர்

அங்கு பணிபுரியும் மூத்த சுகாதார செவிலியர் முதலில் Pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

46 வயதான சாரா லிம் என்ற அவர், COVID-19 சந்தேக நபர்களை சோதிக்கும் பிரிவில் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; முதன்முதலில் தடுப்பூசி போடப்பட்டதற்கு நன்றி கூறினார், பின்னர் மற்றவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், அன்புக்குரியவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும் தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பியதாக அவர் கூறினார்.

விரைவில்

விரைவில் கூடுதலான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மருத்துவமனைகள், பாலிக்ளினிக்ஸ் உட்பட பொது சுகாதார மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், படிப்படியாக ஊழியர்களுக்கு அவர்கள் பணி செய்யும் அந்தந்த வளாகத்திற்குள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் 2 நாட்களுக்கு முன் கூறியது.

முதியோருக்கு..

மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுடன் சுற்றுலா சென்ற இந்திய தூதரக உயர் அதிகாரி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…