இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒற்றுமை கலந்த வலுவான உறவு – இருநாட்டவர்கள் பெருமை

sg-india-relation-
S Iswaran/Linkedin

இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக துணை பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ளிட்ட முக்கிய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் சென்றிருந்தனர்.

அதாவது புது தில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் அமைச்சக வட்டமேசை (ISMR) தொடக்க விழாவில் திரு. வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெம்பனீஸில் ஆயுதத்தை வைத்து சுழற்றிக்கொண்டு, தன்னை தானே தாக்கிக்கொண்ட பெண் – டேசர் மூலம் சுட்டு கைது

இந்த இந்திய பயணம் நல்ல முறையில் அமைந்தது என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவை மேலும் மறு உறுதிப்படுத்த உதவியதாகவும் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளும் இடையே உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது, மேலும் சில முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்ட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை சென்ற திரு. ஈஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் என்பது குறித்து நாம் பதிவிட்டோம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திரு. ஈஸ்வரன் பேசினார். அவருக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் முதலமைச்சர்.

சிங்கப்பூரில் அதிக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முக்கிய நிறுவனம் – “போதிய வருவாய் இல்லை” என இந்த முடிவு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

குஜராத் சென்ற சிங்கப்பூர் துணை பிரதமர்: முதலமைச்சரை சந்தித்து பெருமிதம்