சிங்கப்பூரில் 10 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 8 பேருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மாலுக்குள் நுழைந்த ராட்சத பறவை; வியந்து பார்த்த மக்கள்!

இந்த இரண்டு புதிய பாதிப்புகளுக்கும் முந்தைய குரங்கம்மை தொற்றுகளுக்கும் தொடர்பில்லை என்று MOH தெரிவித்துள்ளது.

அதில் ஒருவர், கடந்த ஜூலை 21 அன்று லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 46 வயதான எஸ்டோனிய ஆடவர். இவருக்கு நேற்று (ஜூலை 24) பாசிட்டிவ் சோதனை முடிவு வந்தது.

இரண்டாவது நபர், 26 வயதான சிங்கப்பூரர். இவருக்கு நேற்று (ஜூலை 24) குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது.

இரண்டு நபர்களும் நன்றாக இருப்பதாகவும், தொடர்புத் தடமறிதல் தொடர்கிறது என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலை சரிவு – முழு ரிப்போர்ட்