பிளாஸ்டிக் கோப்பையால் பிடுங்கப்பட்ட சுறாவின் உயிர்! – சிங்கப்பூரின் கடற்கரைகளில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் விபரீதம்!

shark-plastic palaWAN sentosa
சிங்கப்பூரின் பலவான் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழுவினர் சிறிய சுறாவை இறந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர்.குழுவின் துணை மேலாளர் டாமி லிம், சுறாவின் சடலத்தின் பல புகைப்படங்களை Facebook இல் பகிர்ந்துள்ளார்.
அந்த இளம் சுறா பிளாக்டிப் ரீஃப் இனம் என்று கண்டறியப்பட்டது.சுறாவின் தலை பிளாஸ்டிக் கோப்பையினுள் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.பிளாஸ்டிக் கழிவுகள் தான் இளம் சுறாவின் மரணத்திற்குக் காரணமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும்,கோப்பையானது சுறாவின் தலையை மூடியிருந்ததால் உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்திருக்கும் என்பது யூகம்.

உணவின்றி பசியால் இருந்திருக்கக்கூடும்.சுறாவின் சடலம் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் (LKCNHM) ஒப்படைக்கப்பட்டது, அங்கு அது ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று லிம் பகிர்ந்து கொண்டார்.
கடற்கரையில் குப்பைகளை விட்டுச் செல்வது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வை பறிக்கிறது. பிளாக்டிப் ரீஃப் சுறாக்கள் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டவை.இந்த வகை சுறாக்கள் 1.6 மீ நீளம் வரை வளரும்.பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றாக இந்த இனம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) வகைபடுத்தப் பட்டுள்ளது.
இயற்கையின் ஒரு அங்கமாக திகழும் செண்டோசாவின் குளங்களில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கவனத்தில் கொள்ளுமாறு கடற்கரைக்கு செல்பவர்களை லிம் ஊக்குவித்தார்.
சென்டோசாவில் ஏதேனும் வனவிலங்குகள் துன்பத்தில் இருப்பதை பொதுமக்கள் கண்டால் 1800-ரேஞ்சர்ஸ் (726 4377) என்ற எண்ணில் சென்டோசா ரேஞ்சர் ஹாட்லைனைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிக்கலாம்.