‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

'Sheng Siong' சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Photo: Google Maps

 

வரும் ஜனவரி 01- ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax- ‘GST’) வரி 8%- லிருந்து 9% உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் ஜிஎஸ்டி வரி உயர்வை சமாளிக்க ஏதுவாக, ‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட் இன்று (டிச.15) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்களை குறிவைத்து 18 ஆண்டுகளாக தகாத படங்களை எடுத்துவந்த கட்டுமான துறையை சேர்ந்தவருக்கு சிறை

அந்த அறிவிப்பில், 2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு ‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு 1% தள்ளுபடி வழங்கப்படும். எனினும், இந்த தள்ளுபடி அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தாது.

இஸ்ரேல் தூதரகத்தின் வாசலில் வைக்கப்பட்ட பதாகை.. அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறிய பெண்ணிடம் விசாரணை

குறிப்பாக, குழந்தைகளுக்கான பால்மாவு, புகையிலைப் பொருட்கள், மதுபானம், மருத்துவப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றுக்கு தள்ளுபடி கிடையாது. அதேபோல், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாட்களில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் மூத்த குடிமக்கள், தாங்கள் பொருட்களுக்கு 4% தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை 2024- ஆம் ஆண்டு இருந்து வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு ‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.