இஸ்ரேல் தூதரகத்தின் வாசலில் வைக்கப்பட்ட பதாகை.. அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறிய பெண்ணிடம் விசாரணை

woman-placards-israeli embassy-singapore
Google Maps

இஸ்ரேல் தூதரகத்தின் நுழைவாயிலில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்ததாகக் கூறப்படும் 20 வயது பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 11 அன்று இரவு 10:10 மணியளவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள ஸ்டீவன்ஸ் க்ளோஸில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்ததாக சிஎன்ஏ மற்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தளங்கள் கூறியுள்ளன.

விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவை.. சிக்கிய ICA அதிகாரி

பெண் ஒருவர் தூதரகத்தின் நுழைவாயிலில் அந்த அட்டைகளை வைப்பதையும், பின்னர் அதனை புகைப்படம் எடுப்பதையும் கண்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், அந்தப் பெண் யாரென அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"பாலஸ்தீன விடுதலை" என்ற வாசகத்தை இஸ்ரேல் தூதரக வாசலில் வைத்த பெண் மீது விசாரணை

தற்போது, ​​அந்தப் பெண் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் விசாரணையில் உள்ளார் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

அதில் “பாலஸ்தீன விடுதலை” மற்றும் “போர் நிறுத்தம் – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் இப்போதே நிறுத்து!” போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தது.

முன்னர், இந்த சண்டை தொடர்பாக எந்த வித பொது கூட்டங்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என்று சிங்கப்பூர் திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்