கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்

harbourfront-condo-construction-worker disciplinary action
Complaint Singapore Unrestricted

ஹார்பர் ஃபிரண்டில் உள்ள காண்டோமினியம் கட்டுமான தளத்தில் ஊழியர் ஒருவர் கட்டுமான கழிவுகளை கடலில் கொட்டியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று Complaint Singapore Unrestricted ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

வெளிநாட்டினர் வாழ, வேலை செய்ய சிறந்த நகரம் சிங்கப்பூர்… ஆசியாவிலேயே முதலிடம்

கடந்த டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட காணொளியில், The Reef at King’s Dock பணித்தளத்தில் ஊழியர் ஒருவர் கட்டுமான குப்பைகள் மற்றும் கழிவுகளை தண்ணீரில் தூக்கி எறிவதை காண முடிந்தது.

அந்தத் ஊழியர், கட்டுமான திட்டத்தின் துணை நிறுவனத்தால் வேலைக்கு எடுக்கப்பட்டவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கழிவுகளை அப்புறப்படுத்தியது அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்பரப்பை ஆய்வு செய்வதற்கும், நீரிலிருந்து கழிவுகள் மற்றும் குப்பைகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அதற்காக பணித்தளத்தின் முக்கிய ஒப்பந்தக்காரருடன் இணைந்து பணியாற்றி வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Video: https://www.facebook.com/watch/?v=290722507293809

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்