“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்

tada-driver-fined-racist-remarks-passenger

சிங்கப்பூரில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர், பயணியிடம் இனம் சார்ந்த வார்த்தைகளை சொல்லி கொச்சைப்படுத்திய சம்பவம் குறித்து முன்னர் நாம் பதிவிட்டோம்.

அதில் 54 வயதான சிங்கப்பூரர் பெஹ் பூன் ஹுவா என்ற ஓட்டுநர் பெண் பயணியிடம் “நீங்கள் மோசமானவர்கள்” என்ற இனம் சார்ந்த கொச்சை வார்த்தைகளை கூறியதாக சொல்லப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற 33 வயது ஆடவர்.. 10 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்

இந்நிலையில், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட பெஹ்வுக்கு நேற்று (டிச.13) S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 23 அன்று மதியம் 2 மணியளவில் பாதிக்கப்பட்ட 46 வயதான சிங்கப்பூர் பெண், TADA செயலியில் வாடகை காரை முன்பதிவு செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அவர், பிளாக் 470 பாசிர் ரிஸ் டிரைவ் 6ஐ ஏறும் இடமாக பதிவு செய்தார். இறங்கும் இடத்தை பிளாக் 194 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 12 என பதிவு செய்ய அவர் எண்ணினார், ஆனால் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை அவரால் செய்ய முடியவில்லை.

இறங்கும் இடத்தை பதிவு செய்யாத காரணத்தால் ஓட்டுநர் அந்த பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்டார் என கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த செப். 23 ஆம் தேதி அந்த பயணி தனது பேஸ்புக் பதிவில் கூறினார், மேலும் அவர் எடுத்த காணொளிகளையும் பதிவிட்டார்.

காணொளியில், பெஹ் கோபத்துடன்: “நீ இந்தியா…, நான் சீனர்.., நீங்க மிக மோசமான… மோசமான… மோசமான வாடிக்கையாளர்” என கொச்சைப் படுத்தியதும் தெரியவந்தது.

ஆனால் தாம் ஒரு சிங்கப்பூர் யூரேசியன் என்றும் இந்தியர் அல்ல என்றும் பெஹ்விடம் பயணி கூறினார்.

அதை காதில் வாங்காத பெஹ், தனது குரலை உயர்த்தி மீண்டும் “நீ இந்தியா என்று எனக்கு தெரியும். நான் சீனர்….” என்றும் மேலும் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

தன் மகளுடன் வந்த பயணியை, பிளாக் 194 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 12 இல் பெஹ் இறக்கிவிட்டுள்ளார்.

​​பின்னர் இது குறித்து அவர் அடுத்த நாள் காவல்துறையில் புகார் அளித்தார்.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000