லிட்டில் இந்தியாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற 33 வயது ஆடவர்.. 10 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்

attempted rob at Little India
Google Maps

லிட்டில் இந்தியா அருகே முதியவர் ஒருவரிடம் ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்றதாக 33 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கசாப்புக் கடைக்காரர்கள் இறைச்சிக்காக பயன்படுத்தும் கொக்கி போன்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

சந்தர் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கொள்ளை முயற்சி நடந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படைக்கு தகவல் வந்தது.

கொள்ளையில் ஈடுபட்டவர் தனக்கு முன்பின் தெரியாதவர் என்றும், தனது தங்கச் சங்கிலியை கேட்டு மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

attempted rob at Little India
Singapore Police Force & Google Maps

10,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை முதியவர் தர மறுத்ததால், அதனை வலுக்கட்டாயமாக கொள்ளையடிக்க அவர் முயன்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில், அவர் நகை இல்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார் என்றும், கொக்கியை அப்டியே விட்டுச் சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சந்தேக நபரின் அடையாளத்தை கண்டறிந்த அதிகாரிகள், புகாரை பெற்ற 10 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.

இந்த குற்றத்திற்கு மூன்று முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம்