விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவை.. சிக்கிய ICA அதிகாரி

Singapore short-term visit pass applicants ICA officer charged
Photo: Nuria Ling/TODAY

குறுகிய கால விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவைகளை பெற்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் பிடிபட்டுள்ளார்.

குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரியான கண்ணன் மோரிஸ் ராககோபால் ஜெயராம், 53, என்ற அவர் மீது நேற்று (டிச.14) குற்றம் சாட்டப்பட்டது.

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்

குறுகிய கால வருகை விண்ணப்பங்களுக்கு உதவுவதற்காக அவர் லஞ்சமாக பாலியல் உதவிகளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும் ஊழல் செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார்.

இந்த குற்றங்கள் 2022 மற்றும் 2023 பிப்ரவரி மாதத்துக்கு இடையில் நடந்ததாகவும், அதில் ஆறு ஆண்கள் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ICA இன்ஸ்பெக்டராக இருந்த கண்ணனின் பணிகள் என்ன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது S$100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000