பூட்டிய கடைக்குள் கூட்டமாக மதுபானம் அருந்த அனுமதித்த கடை உரிமையாளர்க்கு S$9,000 அபராதம்

(photo: Google Map)

கெய்லாங் மாலா உணவக உரிமையாளர், சன் வென்கியன் (வயது 39) என்பவருக்கு நேற்று ஜூலை 15 அன்று S$9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மூடிய கடைக்குள் கூட்டமாக வாடிக்கையாளர்கள் மது அருந்த அனுமதித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளையரின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா ? – குழப்பங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம்

சிங்கப்பூரில் நிரந்தரவாசியான அவர், தனது உணவகத்தில் அதிகபட்சமாக ஐந்து வாடிக்கைளையாளர் எண்ணிக்கையை அனுமதிக்கும் விதிமுறையை கடைபிடிக்க தவறியதாகவும், உரிமம் இல்லாமல் மதுபானம் வழங்கியதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது கடையின் பெயர் ஸ்பைசி ஜியாங்கு.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரவு 11.44 மணியளவில், உணவகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன, இருப்பினும் உள்ளே வாடிக்கையாளர்கள் இருப்பதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து, மூன்று காவல்துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து வளாகத்திற்குள் நுழைந்தனர்.

கடை உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் 6 பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாகவும், இரண்டாவது அறையில் 10 பேர் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் முன்னர் காயமடைந்த இந்திய ஊழியர்… வேலையிட பாதுகாப்பிற்கு தூதுவராக செயல்படுகிறார்!

உணவகத்தில் உரிமம் இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை விற்குமாறு சன் தனது ஊழியர்களுக்கு தெரிவித்திருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தனக்கு 21 மாத வயதுடைய இரண்டு குழந்தைகள் இருப்பதால், சன் தனது அபராதத்தை தவணைகளில் திருப்பிச் செலுத்த கோரிக்கை வைத்தார். அபராதத்தை S$1,500 தவணைகளில் திருப்பிச் செலுத்த நீதிபதி அனுமதித்தார். தற்போது உணவகம் மூடப்பட்டது.