கடையில் கைவரிசை காட்டிய நபர் – போலீசிடம் கூறாமல் முகநூல் மூலம் பாடம் கற்பித்த கடை முதலாளி

(photo: mothership)

ஜெயா ஸ்பைசஸ் கடை உரிமையாளர் ஜெயசீலன் என்பவர் கடையில், ஊழியர்கள் வேறு வேளைகளில் ஈடுபட்டு இருந்த நேரத்தில் அங்கு வந்த ஆடவர் ஒருவர் கல்லாவில் கைவிட்டு 800 வெள்ளிகளை எடுத்து சென்றுள்ளார்.

இதை தனது முகநூல் பதிவில், சிசிடீவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி படம் ஒன்றுடன் அவர் வெளியிட்டார். அதில் பதிவாகி இருந்த அந்த நபர் முகக்கவசம் அணிந்திருந்தார்.

ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு பதில் 3 அல்லது 4 சிங்கப்பூர் ஊழியர்களை அமர்த்தும் நிலை..!

அந்த பதிவில், பணத்தை எடுத்தவர் நேரடியாக வந்து மன்னிப்பு கோரி பணத்தை திரும்ப அளித்தால் இதை அப்படியே விட்டு விடுவதாக ஜெயசீலன் தெரிவித்திருந்தார்.

அவர் பதிவிட்டிருந்த சம்பவமானது கடந்த 3ஆம் தேதி ஈசூன் பிளாக் 294ல் அமைத்துள்ள இவரது கடையில் அரங்கேறி உள்ளது. அந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

பதிவிட்ட இரண்டு நாட்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த நபர் ஜெயசீலனை சந்தித்து மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளித்துவிட்டார் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் எதற்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரியாமல் போலீசாருக்கு தெரிவித்து, அவரின் எதிர்காலத்திற்கு சிக்கல் உண்டாக விரும்பாத காரணத்தால் ஜெயசீலன் இவ்வாறு செய்ததாக கூறியிருந்தார்.