ஆப்கானிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த போவதில்லை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு.!

Pic: Singapore Airlines

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு அரங்கேறியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடிவிட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டிற்கு சென்றவுடனே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் ஆப்கன் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக், கத்தார் ஏர்வேஸ், தாய்வான் சீனா ஏர்லைன்ஸ், ஏர்பிரான்ஸ் மற்றும் லுப்தான்ஸா ஆகிய விமான நிறுவனங்களும் அவற்றில் அடங்கும்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்ற ஊழியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு – மீட்க கோரி மனுக்கள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,
பாங்காக், டெல்லி, சிங்கப்பூர், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர்பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பயண நேரம் ஒரு மணிநேரத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது என்றும், இதனால் எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் லுப்தான்சா ஏர்லைன் தெரிவித்துள்ளது.

நீண்ட தூர பயணம் செய்யும் டிரான்ஸிட் விமானங்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இறங்கி செல்வது வழக்கம், தற்போது டிரான்ஸிட் விமானங்களை இயக்குவதற்கு மாற்று வழித்தடத்தை விமான நிறுவனங்கள் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இனி பிஸ்மில்லாஹ் சிக்கன் பிரியாணி.!