தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்ற ஊழியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு – மீட்க கோரி மனுக்கள் அதிகரிப்பு

foreign workers Mandatory rules outdoor Oct 24
(Photo: RFID)

தமிழ்நாடு: தமிழகத்தில் இருந்து பெரும்பாலான ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, UAE போன்ற அரபுநாடுகள் ஆகியவற்றில் பல ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவிட்-19 பரிசோதனை சாதனத்தில், உங்களுக்கானது எது என அறிந்து கொள்ளுங்கள்!

குறிப்பாக கட்டுமான பணி, வீட்டு வேலை ஆகியவைக்காக ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா சூழலில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழகத்தில் புகார் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலங்களில் இதுபற்றிய புகார் மனுக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்பு இல்லாத ஊழியர்கள், நீண்டகாலமாக சிக்கி தவிக்கும் ஊழியர்களை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகின்றன.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தமிழ்நாடு அரசு, துறை ஒன்றை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

வெளிநாட்டு ஊழியரிடம் அதிக தொகை பெற்றுக்கொண்ட சலூன் – போலீசில் புகார்