இன்ஜினில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லண்டனுக்கு திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

Photo: Flightradar24

மார்ச் 25- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ 305 என்ற போயிங் 777- 300 ER (Boeing 777-300ER) என்ற விமானம் 225 பயணிகள் மற்றும் 18 சிப்பந்திகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான இன்ஜின் ஒன்றில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 வருட இடைவெளிக்குப் பிறகு, கோலாகலமாக தொடங்கிய “நோன்பு பெருநாள் ஒளியூட்டு விழா”

இதையடுத்து, விமானிகள் முன்னெச்சரிக்கையாக மீண்டும் லண்டனுக்கு விமானத்தைத் திருப்பி, பிற்பகல் 02.10 PM மணியளவில் (லண்டன் நேரப்படி) லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் (Heathrow International Airport) விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர். இந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயனியர் சாலை நார்த்தில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் இருக்கையில் சிக்கியவர் (வீடியோ) மருத்துவமனையில் அனுமதி!

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்களில் மறுபதிவு செய்வது உட்பட அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.