சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கருடா இந்தோனேஷியா நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம்

SIA & Garuda Indonesia sign agreement
SIA / Garuda Indonesia website

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேஷியா (Garuda Indonesia) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக இன்று (நவ. 26) கூட்டு ஊடக வெளியீட்டில் அறிவித்துள்ளன.

இரண்டு விமான நிறுவனங்களும் பரந்த அளவிலான வர்த்தக கூட்டாண்மையை ஆராய அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனுமதிக்கும்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காணொளியில் வாக்குமூலம் அளித்த ஆடவர் கைது

இதனால் இரு நிறுவனத்தின் விமான வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தெரிவுகள் (options) மற்றும் மேம்பட்ட பயண அனுபவம் கிடைக்கும் என செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

SIA தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கோ சூன் போங் (Goh Choon Phong) மற்றும் கருடா இந்தோனேசியாவின் தலைவரும் CEOவுமான இர்பான் செட்டியாபுத்ரா (Irfan Setiaputra) ஆகியோர் இன்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் நவம்பர் 29 அன்று தனிமை இல்லா VTL பயண ஏற்பாடு தொடங்கப்படவுள்ளது.

குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான பயண அனுமதி (VTP) விண்ணப்பங்கள் ஏற்கனவே நவம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”