வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் தேவை! – விமானத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் தேவை

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை
SIA

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) அதன் ஊழியர்களை பணியிலிருந்து அகற்றியது.தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற பிப்ரவரியில் மீண்டும் ஊழியர்களை பணியமர்த்தியது.எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 2000 விமான பணியாட்களை சேர்க்க வேண்டும் என்று அது இலக்கு நிர்ணயித்தது.

இது வரை 1200 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது.நிர்ணயித்த காலத்திற்கு முன்னதாகவே இலக்கை எட்டிவிடும் அளவிற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை விரைவாக செயல்பட்டு வருவதால் மேலும் 800 பேரை இந்தாண்டு இறுதிக்குள் பணியமர்த்த இப்போது விரும்புகிறது.

தொற்றுப் பரவலின்போது பயணிகளின் வரத்து குறைந்து ஓய்ந்து கிடந்த விமானப் போக்குவரத்து தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையேயான எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவது குறித்து SIA நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

தொற்றுக்கு முன்பு இந்தோனேசியா,சீனா,தென் கொரியா,தைவான் ஆகிய நாடுகளிலிருந்து வேலையாட்களை சேர்த்தது.இந்த நிறுவனத்தைப் போல,இதர உள்ளூர் விமான நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

சாங்கி விமான நிலையத்திற்கு 3,500 முதல் 4000 வரை ஊழியர்கள் தேவை என்று கடந்த மாதம் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.ஊழியர் பற்றாக்குறையால் விமான நிறுவனங்கள் விமான நிலையங்களை செயல்படுத்த முடியாமல் தவிக்கின்றன.எனவே,தகுதியானவர்கள் வேலைக்கு விண்ணப்பித்து முயற்சித்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்தான்.