தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!

(Photo: Reuters)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) “ஃப்ளைட் பாஸ்” (Flight Pass) என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே தள்ளுபடி செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காணொளியில் வாக்குமூலம் அளித்த ஆடவர் கைது

மேலும், பயணிகள் இந்த டிக்கெட்டுகளை எதிர்கால முன்பதிவுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஃப்ளைட் பாஸின் முக்கிய அம்சம் அதன் நெகிழ்வுத்தன்மை என்று SIA கூறியுள்ளது.

இருக்கை கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு அவர்களின் வசதிக்கேற்ப பயணத் தேதிகளையும் பயணிகள் தீர்மானிக்கலாம்.

சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் UK இடையே SIA சேவைகளில் ஃப்ளைட் பாஸ் வழங்கப்படும்.

SIA Flight Pass இணையதளத்தில் ஃப்ளைட் பாஸ்களை மொத்தமாக வாங்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

மற்ற நாடுகளுக்கும் படிப்படியாக இது அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”