சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து!

Photo: Singapore Airlines Official Facebook Page

அமெரிக்கா நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines- ‘SIA’) விமானத்தின் இறக்கை தரையில் இருந்த மற்றொரு விமானத்தோடு உரசியதால், சிங்கப்பூர் நேரப்படி, நவம்பர் 4- ஆம் தேதி அன்று விமானம் ரத்துச் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுரங்கப் பாதையின் சுவரில் கார் மோதியதால் தீ விபத்து!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான SQ33 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு நவம்பர் 3- ஆம் தேதி அன்று உள்ளூர் நேரப்படி இரவு 09.50 AM மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி நவம்பர் 4- ஆம் தேதி அன்று மதியம் 12.50 PM மணிக்கு) புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நவம்பர் 3- ஆம் தேதி அன்று, சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக டாக்ஸியில் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் Airbus A350-900 விமானத்தின் இறக்கை தரையில் இருந்த மற்றொரு விமானத்துடன் உரசியது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

“வெளியில் நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி; இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது” – வெளிநாட்டு ஊழியர்கள்

அந்த ‘Airbus A350- 900’ விமானம் பாதுகாப்பு சோதனைக்காகத் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு, விமானத்தை பொறியாளர்கள் எதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர். மேலும், விமானத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விமான சேவை ரத்துச் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, அன்று இரவு ஹோட்டலில் தங்க வைத்து, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க நிறுவனம் விரும்புகிறது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்துக் கொண்டிருப்பதால், விமான நிறுவனத்தால் மேலும் கருத்து தெரிவிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.