தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டத்தில் SIA, Scoot விமான சேவைகள் விரிவு

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

மெல்போர்ன், சிட்னி மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் இருந்து வரும் நவம்பர் 8 முதல் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான சிறப்பு திட்டத்தின்கீழ் (VTL) விமானங்களை இயக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயண ஏற்பாடு நீட்டிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது.

தடுப்பூசி போட்டுகொண்டோர் சிறப்பு பயணத்தில் இதுவரை 5,100 பேர் வருகை – 5 பேருக்கு கோவிட்-19 பதிவு

மெல்போர்னிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமானங்கள், அதாவது SQ218 மற்றும் SQ228 ஆகியவை VTL சேவையில் இயங்கும் என்று SIA தெரிவித்துள்ளது.

இது SQ212 மற்றும் SQ222 என்ற விமானங்கள் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இருமுறை VTL திட்டத்தின்கீழ் SIA இயக்கும்.

மேலும், ஜூரிச்சிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி சேவையான SQ345 விமானம் VTL விமானமாகச் சேவையாக செயல்படும் என்று SIA கூறியது.

பட்ஜெட் விமானமான ஸ்கூட், தினசரி VTL சேவைகளை மெல்போர்னில் இருந்து (TR19) இயக்கும், அத்துடன் வாரத்திற்கு நான்கு முறை சிட்னியில் இருந்தும் (TR 13) இயக்கும்.

SIAஆல் இயக்கப்படும் VTL விமானங்களுக்கான விமான அட்டவணைகள் SIA இணையதளத்தில் வெளியிடப்படும்.

தனிமைப்படுத்தல் இல்லாமல், தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவு