அருமையான மாற்று ஏற்பாடை செய்யவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot விமானங்கள்!

iStock

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் Scoot ஆகியவை இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விமான எரிபொருளைப் பயன்படுத்தத் தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

இது பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான Neste வழங்கிய விலங்குகளின் கழிவு கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படும்.

சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!

பின்னர், சிங்கப்பூரில் உள்ள ExxonMobilஇன் வசதிகளில் சுத்திகரிக்கப்பட்ட ஜெட் எரிபொருளுடன் அது கலக்கப்படும்.

இந்த பைலட் திட்டம், CAAS மற்றும் Temasek ஆதரவுடன் நடைபெறுகிறது. ExxonMobil இலிருந்து கலப்பு எரிபொருளை SIA வாங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையான விமான எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2,500 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மற்றவர்களை வாழ வைப்பது நம் ரத்தத்தில் ஊறியது” – சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியில் இயலாதோருக்கு உதவி வரும் தமிழ் சிறுமி!