தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகள்: SIA, Scoot அதிரடி – 121 இடங்களுக்கு, 370,000 டிக்கெட்டுகள்

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் Scoot விமான டிக்கெட்டுகளை அசத்தல் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

சுமார் 1,70,000 க்கும் மேற்பட்ட இருவழி (round-trip) பயண டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சமீபத்தில் அறிவித்தது.

குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு ஒரு முறை மொத்தத் தொகை வழங்க முதலாளிகளுக்கு பரிந்துரை

அதாவது 71 இடங்களுக்கான டிக்கெட்டுகளை நீங்கள் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

Scoot

கூடுதலாக, அதன் துணை நிறுவனமான Scoot விமானம் தள்ளுபடி விலையில் சுமார் 200,000 டிக்கெட்டுகளை வழங்குகிறது.

இது 50 இடங்களுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் SIA நிறுவனம் மொத்தமாக தள்ளுபடி விலையில் 370,000 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை பயணிகளுக்கும் வழங்கவுள்ளது.

பயணம் எப்போது?

SIA இன் தள்ளுபடி டிக்கெட்டுகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு இடையில் தகுதியான விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதே போல, Scoot இன் தள்ளுபடி டிக்கெட்டுகள் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் 2024 அக்டோபர் மாதத்துக்கு இடையில் ஒரு வழி விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த டிக்கெட்டுகளை எங்கே வாங்கலாம்?

சன்டெக் சிங்கப்பூர் கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி நிலையத்தின் அரங்குகள் 405 மற்றும் 406 இல் நடைபெறும் Time To Fly travel fair கண்காட்சியில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

இந்த நவம்பர் 3 முதல் 5 வரை கண்காட்சி நடைபெறும்.

கலந்துகொள்ள முடியாதோர் என்ன செய்வது?

சன்டெக் சிட்டி கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

வரும் நவம்பர் 3 முதல் 16 வரை SIA மற்றும் Scoot இன் இணையதளங்களில் தள்ளுபடி டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி