சாங்கியில் இருந்து முக்கிய ஐந்து நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை வழங்கும் SIA, Scoot

Singapore Airlines Scoot expand service
Photo: Scoot Airlines

சாங்கி விமான நிலையத்தில் இருந்து முக்கிய ஐந்து நகரங்களுக்கு SIA மற்றும் Scoot மீண்டும் விமானங்களை இயக்க உள்ளது.

அதாவது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் வரும் நவம்பர் 26 முதல் சீனாவின் நான்கு நகரங்களுக்கு விமானங்களை மீண்டும் இயக்கவுள்ளது.

குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு ஒரு முறை மொத்தத் தொகை வழங்க முதலாளிகளுக்கு பரிந்துரை

அதே நேரத்தில் ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் இருந்து ஷங்ஷாவிற்கு மீண்டும் சேவையை தொடங்கும் எனவும் கூறியுள்ளது.

மேற்கண்ட அந்த ஐந்து வழித்தடங்களிலும் இந்த 2023 ஆம் ஆண்டில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

நான்கு நகரங்கள்

Chongqing, Chengdu, Shenzhen மற்றும் Xiamen ஆகிய வழித்தடங்களில் SIA சேவையை வழங்கவுள்ளது.

மேற்கண்ட பகுதிகளுக்கு ஒழுங்குமுறை காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி