அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்!

SIA suspends flights
(Photo: Singapore Airlines)

Singapore Airlines (SIA): சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கும் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கும் இடையிலான அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அறிவித்துள்ளது.

Return என்னும் திரும்பும் சேவைகளை நிறுத்துவதாக SIA அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திங்கள்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்தது.

சிங்கப்பூரில் “தடுப்பூசி தகுதி” நிலையை இழந்த Work pass அனுமதி ஊழியர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா?

இந்த காலவரையின்றி தடை அறிவிப்பால், SQ362 மற்றும் SQ361 விமான சேவைகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தடையால் ஏற்பட்ட சிரமத்திற்கு அனைத்து விமான வாடிக்கையாளர்களிடமும் SIA நிறுவனம் மன்னிப்புக் கேட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டிக்கெட்டின் பயன்படுத்தப்படாத தொகை முழுவதுமாகத் திருப்பித் தருவதாகவும் அது கூறியது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் SIA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!