வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்

Pic: Singapore Airlines

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் அடுத்த ஆண்டு 2022ல் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தில் (VTL) கூடுதலாக விமானங்களை இயக்கும்.

அப்போது பயணிகள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள் இருக்கும்.

“கால்நடைகளை போல லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம், ஒரு தசாப்த கால பிரச்சினை” – லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்குமா?

நேற்று நவம்பர் 19 அன்று, ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோபன்ஹேகன் (Copenhagen), பிராங்பேர்ட், லண்டன், மிலன், முனிச், நியூயார்க், பாரிஸ், ரோம், சியாட்டில் மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களுக்கு VTL விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் அதிகரிக்கப் போவதாக SIA தெரிவித்துள்ளது.

அதே போல, வரும் நவம்பர் 29 முதல் VTL விமானங்களின் பட்டியலில் கோலாலம்பூர் சேர்க்கப்படும், அதே நேரத்தில் ஹூஸ்டன் மற்றும் மான்செஸ்டருக்கான விமானங்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 19 முதல் தொடங்கும்.

SIA குழுமம் தற்போது 26 நகரங்களுக்கு VTL சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், சிங்கப்பூர் 13 நாடுகளுடன் VTL பயண ஏற்பாடுகளை தற்போது வரை கொண்டுள்ளது, அந்த எண்ணிக்கை ஆண்டின் இறுதியில் 21ஆக உயரலாம்.

சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு குடும்பம், வேலைகள், சமூகம் ஆகியவை வாழ்க்கையின் அர்த்தம்: ஆய்வு