சிங்கப்பூரில் புதிதாக 2,396 பேருக்கு நோய்த்தொற்று உறுதி!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (11/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (11/11/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 2,396 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,379 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமூக அளவில் 2,243 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 136 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,077 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் உணவகங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவு உண்ண அனுமதி!

கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 74 முதல் 100 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 270 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 129 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முகக்கவசத்தை சரியாக அணியுமாறு வலியுறுத்திய பேருந்து ஓட்டுநரைத் திட்டிய பயணிக்கு அபராதம் விதிப்பு!

கடந்த நாளில் 4,410 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் 609 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.