சிங்கப்பூரில் மேலும் 339 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் நேற்று (13/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 339 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 324 பேருக்கு பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 318 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 15 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,701 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் விமானநிலையத்தில் பரபரப்பு – கூண்டில் இருந்து எஸ்கேப் ஆன சிங்கங்கள்!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 798 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 575 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 87 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 33 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 3 பேரின் உடல்நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

போலி ஆடம்பரமான பொருட்கள் விற்பனை – சந்தேகத்தில் ஆடவர் கைது

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து 669 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500- க்கு கீழ் பதிவாகி வருவதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.