சிங்கப்பூரில் மேலும் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (05/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (05/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 552 பேருக்கு பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 537 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 523 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 14 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,69,211 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா உறுதி!

கொரோனா பாதிப்பால் மேலும் 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 52 முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 863 பேர் மருத்துவமனைகளில் உள்ள பொதுவார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 155 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 58 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஸ்மார்ட் பேண்டேஜைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்!

கடந்த நாளில் 1,518 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 242 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்த 37 வயது பயணிக்கு ‘ஓமிக்ரான்’ வகை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இவர் சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.