சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் நேற்று (09/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 665 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சமூக அளவில் 649 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 16 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 271,979 ஆக உயர்ந்துள்ளது.

‘ரிஸ்க்’ நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 666 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 111 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், 51 ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 11 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 1,474 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்”- சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தல்!

சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்; அவர் சாங்கி விமான ஊழியர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.