சிங்கப்பூரின் ஊழியரணியில் 97 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்

Photo: Getty

சிங்கப்பூரின் ஊழியரணியில் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சுமார் 75,000 ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி போடவில்லை என்று மனிதவள அமைச்சகம் தி சண்டே டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

கடந்த அக்டோபர் 17 முதல் 113,000 தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் இருந்தனர், இதில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல், பணியிடத்திற்குத் திரும்புவதற்கு அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு முன்னர் செய்யப்பட்டது.

சிங்கப்பூரின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு அமைப்பான பொதுச் சேவைப் பிரிவு (PSD), தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் மற்றவர்களைப் பாதுகாக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தடுப்பூசி போடப்படாத அதிகாரிகளை ஊக்கப்படுத்தியது.

அதில் பணிபுரியும் 153,000 பொது அதிகாரிகளில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

காதலியுடன் உறவில் இருந்த காணொளியை அவரின் உறவினருக்கு பகிர்ந்த வெளிநாட்டவருக்கு சிறை