SIA விமான உணவகங்களில் 400-க்கும் மேற்பட்டோர் உணவு அருந்தினர்..!

Singapore Airlines A380 restaurant
Singapore Airlines A380 restaurant (Photo Credit: AFP/ROSLAN RAHMAN)

சாங்கி விமான நிலையத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உணவகங்களில் நேற்று சனிக்கிழமை (அக். 24) 400-க்கும் மேற்பட்டோர் உணவு அருந்தினர்.

உணவகங்களாக மாற்றப்பட்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஜெட் விமானங்களில் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பு வழக்கமான கிருமித்தொற்று பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஜெட் விமானங்களில், வருகையாளர்கள் மதிய உணவை சாப்ப்பிட்டு மகிழ்ந்த வேளையில், திரைப்படங்களையும் பார்த்தனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானத் துறை கடுமையான நெருக்கடியில் உள்ள நிலையில், நிறுத்தப்பட்டுள்ள விமானங்களில் வருமானத்தை ஈட்டுவதற்கான மாற்று வழிகளில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

சமூக இடைவெளி வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுமார் பாதி இடங்கள் விமானத்தில் காலியாக விடப்பட்டன.

இந்த உணவகத்தில் உணவுக்கான கட்டணமாக S$50 முதல் S$300 வரை வசூலிக்கப்படுகிறது. இதில் நல்ல அனுபவம் கிடைத்ததாக வருகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…