“உலகின் மிக சிறந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” – மிகவும் போற்றப்படும் ஆசிய நிறுவனம் என கவுரவம்!

(Photo: SIA/FB)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) உலகின் மிக சிறந்த விமான நிறுவனமாக ஃபார்ச்சூன் இதழில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இதழின், உலகின் மிகவும் போற்றப்படும் 50 நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி ஆசிய நிறுவனமாகவும் SIA குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!

ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு 34வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 32வது இடத்தைப் பிடித்துள்ளது.

தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

மேலும் அதை தொடர்ந்து, ஃபைசர் நான்காவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து 15வது ஆண்டாக ஆப்பிள் நிறுவனம் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

காணாமல் போன சிங்கப்பூர் பெண்…ஜோகூர் பாரு ஆற்றில் மிதந்த சோகம் – என்ன நடந்தது ?