வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்

Singapore allows restaurants to hire Indian cooks
AFP

Singapore Jobs for Indians: சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவகங்களில் வேலைசெய்யும் சமையல்காரர்களை பாரம்பரியமற்ற பணியமர்த்தல் பட்டியலில் சிங்கப்பூர் சேர்த்துள்ளது.

Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்

ஏனெனில் கடந்த ஆண்டு முதல் S PASS தகுதி சம்பளமும், தீர்வைக் கட்டணமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் தட்டுப்பாடுள்ள சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் சில வேலை நிலைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டத்தை சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது.

சமீபத்தில் இந்திய உணவகங்களில் சமையல்காரர்களுக்கான விண்ணப்ப செயல்முறையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது.

பாரம்பரியமற்ற பட்டியலில் (NTS) சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை NTS பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தகுதிபெறும் நிறுவனங்கள் சமையல் ஊழியர்களுக்காக வேலை அனுமதி விண்ணப்பங்களை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு முன்னர் சீனா, மலேசியா, ஹாங்காங், மக்காவ், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய பகுதிகளிலிருந்து ஒர்க் பெர்மிட் அனுமதியில் சமையல்காரர்களை சிங்கப்பூர் உணவகங்கள் எடுத்துவந்தன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சாங்கி விமான நிலையத்தில் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்திய ஆடவர் கைது