‘சிங்கப்பூர், சீனா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’- பயண டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines), சிங்கப்பூர், சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வரும் டிசம்பர் 30- ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளது.

பட்டறையில் தீ விபத்து: 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

எனினும், இவை நேரடி விமான சேவை கிடையாது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கவுள்ளது.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்காதீங்க…வெளிநாட்டு ஊழியர்களின் கவனத்திற்கு!

இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் A350- 900 ரக விமானத்தை இயக்கவுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். இது தொடர்பான, பயண அட்டவணை, பயண டிக்கெட் விவரங்கள் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Singapore Airlines Website