ஹைதராபாத், சிங்கப்பூர் வழித்தடத்தில் ‘A350- 900’ விமானம் இயக்கப்படும்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

இந்தியாவின் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம்.

பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையேயான வழித்தடத்தில் ஏர்பஸ் A350- 900 விமானம் இயக்கப்படும். இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும். வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர்பஸ் A350- 900 விமானம் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும்.

எனினும், வாரத்தில் வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டும் A350- 900 விமானம் இயக்கப்படும். இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற நாட்களில் இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்கள் இயக்கப்படும்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆஸ்திரேலியாவுக்கு பயணம்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ‘A350- 900’ ரக விமானம் அதிநவீன சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது என்பது இந்த விமானத்தின் தனி சிறப்பு.