சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆஸ்திரேலியாவுக்கு பயணம்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைச் சுற்றுப்பயணமாக இன்று (16/10/2022) ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களின் 7வது வருடாந்திரக் கூட்டத்தில் (7th Singapore-Australia Annual Leaders’ Meeting) கலந்துக் கொள்வதற்காக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (16/10/2022) ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா (Canberra) மற்றும் சிட்னி (Sydney) ஆகிய நகரங்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Prime Minister Anthony Albanese), கான்பெர்ராவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்க்கு இரவு விருந்தளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்டு தலைவர்கள் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது. இதில் இரு நாட்டு உயரதிகாரிகளும் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.

அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாமுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அதிபர்!

சந்திப்புக்கு பின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைக் சந்திக்கின்றனர். சிட்னியில் தொழில் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வரும் அக்டோபர் 18- ஆம் தேதி அன்று தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்புகிறார்.

சிங்கப்பூர் பிரதமருடன் அவரது மனைவி திருமதி லீ மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஃபூ மீ ஹர் (Foo Mee Har), சக்தியாண்டி பின் சுபாத் (Saktiandi bin Supaat) மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

JB சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் – என்ன காரணம்?

சிங்கப்பூர் பிரதமர் ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், நிதியமைச்சரும், துணை பிரதமருமான லாரன்ஸ் வோங், அக்டோபர் 16- ஆம் தேதி முதல் அக்டோபர் 18- ஆம் தேதி வரை தற்காலிக பிரதமராக (Acting Prime Minister) செயல்படுவார்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.