அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாமுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அதிபர்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (16/10/2022) வியட்நாமுக்கு செல்கிறார்.

சென்னை, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு டன் கணக்கில் பறக்கும் தீபாவளி இனிப்புகள்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வியட்நாம் நாட்டின் அதிபர் நுயென் சுவான் ஃபுக்கின் (President Nguyen Xuan Phuc) அழைப்பின் பேரில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக வியட்நாம் நாட்டிற்கு இன்று (16/10/2022) செல்கிறார்.அந்நாட்டின் ஹனோய், பாக் நின் மாகாணம் (Bac Ninh province), ஹோ சி மின் (Ho Chi Minh) ஆகிய நகரங்களைப் பார்வையிடுகிறார்.

சிங்கப்பூர் அதிபரின் இப்பயணம் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான நீண்ட கால உறவுகளை மீண்டும் உறுதிப்படுகிறது. மேலும், இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். அதேபோல், சிங்கப்பூர் அதிபருக்கு, வியட்நாம் அதிபர் விருந்தளிக்கிறார்.

JB சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் – என்ன காரணம்?

வியட்நாம் நாட்டு முக்கிய தலைவர்களை சிங்கப்பூர் அதிபர் சந்தித்துப் பேசுகிறார். அத்துடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொள்ளவிருக்கிறார். இந்த வியட்நாம் பயணத்தின் போது, சிங்கப்பூர் அதிபருடன் மனிதவளம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் (Minister for Manpower and Second Minister for Trade and Industry Dr Tan See Leng), வெளியுறவு மற்றும் தேசிய வளர்ச்சிக்கான மூத்த அமைச்சர் சிம் ஆன் (Senior Minister of State for Foreign Affairs and National Development Sim Ann), நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 20- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் அதிபர் நாடு திரும்புகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.