இந்திய ராணுவத்துடனான ‘அக்னி வாரியர்’ பயிற்சியை நிறைவு செய்த சிங்கப்பூர் ராணுவ வீரர்கள்!

Photo: Ministry Of Defence, Singapore

‘அக்னி வாரியர்’ (Agni Warrior) என்ற ராணுவப் பயிற்சி இந்தியாவின் தேவ்லாலி (Devlali) என்ற பகுதியில் கடந்த நவம்பர் 13- ஆம் தேதி அன்று தொடங்கியது. இந்த ராணுவப் பயிற்சியை இந்திய மற்றும் சிங்கப்பூர் ராணுவ வீரர்கள் கூட்டாக மேற்கொண்டனர். இரு நாட்டு ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்கள் 270 பேர் கலந்துக் கொண்டனர். இப்பயிற்சியில் இந்திய மற்றும் சிங்கப்பூர் ராணுவப் படையினரின் பீரங்கிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தனர்.

வெளிநாட்டிற்கு சென்றால் இவ்ளோ சம்பளம் கிடைக்கும் ! – தாய்நாடு இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்!

இந்த நிலையில், இந்திய ராணுவத்துடனான ‘அக்னி வாரியர்’ பயிற்சியை நிறைவு செய்த சிங்கப்பூர் ராணுவ வீரர்கள், நவம்பர் 30- ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நிறைவுச் செய்தனர்.

ஒடிஷா மாநில முதலமைச்சருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

இந்திய, சிங்கப்பூர் ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் சிங்கப்பூர் ராணுவப் படை வீரர்கள் பங்கேற்கும் ‘அக்னி வாரியர்’ பயிற்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.