கம்போடியாவில் சிங்கப்பூர், இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

Photo: Singapore Defence Minister Official Facebook Page

கம்போடியா நாட்டின் சியாம் ரீப் (Siem Reap) நகரத்தில் 9வது ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் (9th ASEAN Defence Ministers’ Meeting- ‘ADMM’ Plus), ஆசியான்- அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் (ASEAN-US Defence Ministers’ Informal Meeting), ஆசியான்- இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் (ASEAN-India Defence Ministers’ Informal Meeting) நவம்பர் 22- ஆம் தேதி அன்று நடைபெற்றது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்!

இந்த கூட்டங்களில், இந்தியா,கம்போடியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

அந்த வகையில், ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, கம்போடியா நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள, கூட்டங்களுக்கு இடையே சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Singapore Defence Minister Ng Eng Hen), நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.

கூகுள் நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி…!

அதைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்த சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், இரு நாட்டு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா- சிங்கப்பூர் இடையே கடல்சார் பயிற்சியை இருவரும் வரவேற்றனர்.

Verified by MonsterInsights