ஆஸ்திரேலிய காட்டுத்தீ; தொடரும் சிங்கப்பூர் வீரர்களின் பணி – நன்றி கூறிய ஆஸ்திரேலியப் பிரதமர்..!

Singapore Armed Forces provides continued aid to firefighting efforts in Australia (Photos: AFP, Ng Eng Hen FB)

Australia Bushfires : ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் படைகள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றன.

ஆஸ்திரேலிய வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, அந்நாட்டையே உலுக்கி வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் மாதக்கணக்காக போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா காட்டு தீ; கைகொடுக்கும் சிங்கப்பூர் விமான படை..!

இதில் 25க்கும் மேற்பட்ட மக்கள், மில்லியன் கணக்கான விலங்குகள் இந்த தீயிக்கு இறையாகியுள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இதில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த சிங்கப்பூர் ஆகாயப் விமானப் படையின் (RSAF), இரண்டு சினூக்ஸ் ஹெலிகாப்டர்கள், காட்டுத் தீ நிவாரணப் பணிகளில் உதவ 42 வீரர்களுடன் புறப்பட்டு சென்றனர், இதில் சிங்கப்பூர் ராணுவ வீரர்கள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கூறுகையில்: “ஒரு சிறிய நகர மாநிலமாக, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட அழிவின் மிகப்பெரிய அளவை நாம் கற்பனை செய்வது கடினம். இன்னும் பொங்கி எழும், இந்த காட்டுத்தீயால் ஏற்கனவே 6 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர்களை அழித்துவிட்டது”, என்று ஆஸ்திரேலியாவின் நிலைமை குறித்த கவலையை வெளிப்படுத்தினார்.

இந்த காட்டுத்தீ துயரத்திற்கு பேருதவி வழங்கிய சிங்கப்பூர், US, கனடா மற்றும் நியூஸிலண்ட் உள்ளிட்ட பலநாடுகளுக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.