சிங்கப்பூர் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிள் பயணம் – காரில் மோதாமல் நூல் இழையில் தப்பிக்கும் காணொளி..!

Singapore AYE cyclist incident
photo credit : Gabriel Lim

சிங்கப்பூர் AYE என்று அழைக்கப்படும் அயர்-ராஜா அதிவேக நெடுஞ்சாலையின் வலதுபுற பாதையில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அச்சமயம் அந்த வழியே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சைக்கிளில் மோதாமல் நூல் இழையில் தப்பிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : உயிரிழந்த கணவர் நினைவாக வைத்திருந்த செல்போன் திருட்டு; 80 கி.மீ பயணம் செய்து மீட்ட நடத்துனர்..!

அந்த காரின் ஓட்டுனரான Gabriel Lim, MotherShip-பிடம் பகிர்ந்து கொண்ட காணொளியின் படி, சைக்கிள் ஓட்டியவர் AYE சாலையின் வலதுபுற பாதையின் நடுவில் சென்று கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் நெடுஞ்சாலை குறியீட்டின் படி, மூன்று வழி பாதையில் வலதுபுற பாதை முந்திக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவில் உள்ள பாதையில் வாகனங்களை முந்திய பின் நீண்ட நேரம் அதில் இருக்கக்கூடாது.

மேலும், முதலில் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டுவது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து Lim கூறுகையில், இந்த சம்பவம் அக்டோபர் 17 இரவு சுமார் 7:25 மணிக்கு நடந்தது என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செயல் ஆபத்தானது என்றும், பொதுமக்களுக்கும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் இந்த காணொளியை பதிவேற்றியதாகவும் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொரோனா: 50-க்கும் குறைவானவர்கள் சமூக தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts