சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் கொரோனா: 50-க்கும் குறைவானவர்கள் சமூக தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிப்பு..!

COVID-19 recovered MOH
Fourteen more cases have been discharged (Photo: Reuters)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 14 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் 57,798 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகளை வழங்க Here With you ஹெல்ப்லைன்..!

தற்போது 37 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH தெரிவித்துள்ளது.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர் என்றும், யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும், 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அல்லது மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த தொற்று காரணமாக இதுவரை மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் MOH குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆட்குறைப்புக்குப் பதிலாக சம்பளத்தைக் குறைக்கலாம் – சம்பள மன்றம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts