ஆட்குறைப்புக்குப் பதிலாக சம்பளத்தைக் குறைக்கலாம் – சம்பள மன்றம்.!

NWC SetOut Guidelines
Photo: TODAY

சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் சிரமமான சூழ்நிலையில், மக்­கள் வேலை­களை இழப்­ப­தை­ தவிர்க்க  சிங்­கப்­பூர் சம்­பள மன்­றம் நேற்று (16-10-2020)  புதிய பரிந்­து­ரை­களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலை­க­ளைத் தக்க வைத்­துக்­கொள்ள ஆட்குறைப்புக்கு பதிலாக தற்­கா­லி­க­மாக ஊதிய குறைப்­பு­க­ளை மேற்கொள்ளலாம் என்று முத­லா­ளிகளுக்கு சம்பள மன்­றம் பரிந்­துரை செய்துள்­ளது.

இதையும் படிங்க: ஊழியர்களை மருத்துவ சோதனைக்கு அனுப்பத் தவறிய 2 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து..!

இந்த சம்­ப­ள குறைப்பை மேற்­கொள்­ளும் முன், ஊழி­யர்­க­ளின் ஆத­ர­வைப்­பெற வேண்­டும் என்றும், குறைக்­கப்­பட்ட சம்­ப­ளம் பின்­னர் வழமைக்கு திரும்பி­ வி­டும் என்­பதை ஊழி­யர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்றும் மன்றம் அறி­வு­றுத்­தி­யுள்ளது.

இந்த புதிய வழி­காட்­டி­கள், வருகின்ற நவம்­பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை­யிலும் நடைமுறையில் இருக்­கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழி­காட்­டி­கள் கட்­டா­ய­மல்ல என்றாலும் அரசு இதனைக் ஏற்­றுக் கொண்­டுள்­ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் சுமார் 450,000 பேருக்கு தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள்..!

சிங்கப்பூர் சம்­பள மன்­றத்­தின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் தலை­வர் மேரி லியவ் கூறுகையில், ஊழி­யர்­களைத் தக்கவைத்­துக் கொள்­வ­தி­லும், மாற்று வேலைக்கு அனுப்­பு­வ­தி­லும் சிர­மம் ஏற்­பட்­டால் இறுதி முயற்­சி­யாக, ஆட்­கு­றைப்­புக்­கு பதி­லாக ஊதி­ய குறைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…