சிங்கப்பூரின் அரிய வகை புறா…வீட்டின் கண்ணாடியில் மோதி பரிதாப பலி – சிங்கப்பூர் வைரல் வீடியோ

சிங்கப்பூரில் ஒரு வீட்டின் கண்ணாடி ஜன்னலில் மோதிய பறவை ஒன்று தரையில் அசையாமல் கிடந்துள்ளது, என்ன ஆச்சு என அதை சோதனை செய்தபோது அது உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்த பறவையின் புகைப்படம் மற்றும் அது ஜன்னலில் மோதியதால் உண்டான தடம் அடங்கிய வீடியோ ஆகியவை Singapore Wildlife Sightings எனும் Facebook குழுவில் கடந்த ஜனவரி 30 அன்று பதிவேற்றப்பட்டன.

காணாமல் போன சிங்கப்பூர் பெண்…ஜோகூர் பாரு ஆற்றில் மிதந்த சோகம் – என்ன நடந்தது ?

அந்த வீடியோ மூலம் கண்ணாடி ஜன்னலில் பறவை மோதியிருக்கும் துல்லியமான இடத்தை காண முடிந்தது, ஏனெனில் அதன் உடல் அச்சு, அதன் இறக்கைகளின் தோற்றம் ஆகியவற்றை அதில் தெளிவாகக் காண முடிந்தது.

இந்த இளஞ்சிவப்பு கழுத்துடைய பச்சை நிற புறாக்கள், சிங்கப்பூரில் மிகவும் பொதுவான பறவை இனங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், அவை சாதாரண புறாவை விட குறைவாகவே காணப்படுகின்றன, ஏனெனில் இளஞ்சிவப்பு-கழுத்து பச்சை நிற புறாக்கள் மரங்களில் வாழ்கின்றன.

பகல் நேரத்தில், பறவைகள் ஜன்னல்களில் மோத காரணம்?

அவை தாவரங்களின் பிரதிபலிப்பைப் கண்ணாடி வழி பார்க்கின்றன அல்லது கண்ணாடி உள்ளே அமைந்துள்ள பானை செடிகள் அல்லது தாவரங்களையும் பார்க்கின்றன, இதனால் மோதல்கள் ஏற்படலாம் என ஆல் அபவுட் பேர்ட்ஸ் இணையதளம் கூறியுள்ளது.

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு இண்டிகோ விமானம் வழங்கும் சிறப்பு சலுகை