திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது – சிங்கப்பூர் கத்தோலிக்க திருச்சபை !

marriage

LGBTQ மக்கள், திருமணம் குறித்த சர்ச்சின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும், குடும்பம் என்பது ஒரு தந்தை, தாய் மற்றும் அவர்களது குழந்தைகளை உள்ளடக்கியது என்றும் ஜூலை 31 அன்று சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் கூறியுள்ளது.

திருமணத்தின் பலனளிக்கும் தன்மையாக அது இனப்பெருக்கத்திற்குத் திறந்திருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் கூறியுள்ளது.

மேலும் குற்றவியல் சட்டத்தின் 377A பிரிவு ரத்து செய்யப்பட்டால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் இயற்கையின் ஒரு அங்கமாக இருக்காது என்றும் அது கவலை அளிப்பதாகவும் சர்ச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் இந்த நிலையைப் பாதுகாக்க, அது அரசியலமைப்பில் கூட இணைக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.