சிங்கப்பூரில் சைனாடவுன் கடைக்காரர் மற்றும் அவரின் மகனுக்கு தொற்று பாதிப்பு

Singapore Chinatown Covid-19
(PHOTO: ALT T via Google Maps)

சிங்கப்பூரில் நேற்றைய (பிப். 11) நிலவரப்பபடி, சமூக அளவில் 3 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அந்த 3 பேரில், சைனாடவுன் கடைக்காரர் ஒருவரும் அவரது மகனும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.. சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்போது கைது

சைனாடவுன் கடைக்காரர்

66 வயதான அந்த சைனாடவுன் கடைக்காரர், சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார். அவர் Chinatown Complexல் பணிபுரிகிறார்.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொற்று அறிகுறிகள் ஏற்பட்டது. ஆனால், அவர் மருத்துவரை பார்க்கவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பின்னர், சைனாடவுன் கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட COVID-19 பரிசோதனையில் போது கடந்த 9ஆம் தேதி அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்தியா-சிங்கப்பூர் பயணிகளுக்கு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்….

மகன்

அவரின் மகன், 32 வயதான சிங்கப்பூரர், சாங்கி விமான நிலையத்தின் 3ம் முனைய Swensen’s உணவகத்தில் பணிபுரிகிறார்.

இவர் தந்தையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அடையாளம் காணப்பட்டு, அவர் 10ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.

இவருக்கும் பரிசோதனையின் போது கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

3வது நபர்

சமூக அளவில் பாதிக்கப்பட்ட 3வது நபர், 20 வயதான முழுநேர தேசிய சேவையாளர். அவர் பயா லேபார் ஆகாயப்படைத் தளத்தில் பணிபுரிகிறார்.

நெருங்கிய தொடர்பு அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

மோசடி முகவர்களால் வெளிநாட்டு ஊழியர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்….