இக்கட்டான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட SCDF – அமைச்சர் பாராட்டு.!

Singapore Civil defence force
Pic: Shaahid hisam/SCDF FB

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (SCDF) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 7,000க்கும் மேற்பட்ட உத்தேச COVID-19 நோயாளிகளைக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அடுத்தக் கட்ட வளர்ச்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர், திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்!

உள்துறை அமைச்சகத்தின் சீருடைப் பிரிவின் தேசிய தினப் பற்றுறுதி இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கா.சண்முகம் இதனைத் தெரிவித்தார்.

இக்கட்டான காலகட்டத்தில், முன்வந்து பங்களித்த அதிகாரிகள், தொண்டு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை அமைச்சர் கா.சண்முகம் பாராட்டினார்.

மேலும், அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படுவதன் மூலம் பல இன்னல்களை எதிர்கொள்ள முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு