வூஹான் வைரஸ் பாதித்த 3 புதிய நபர்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர் – மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

Singapore confirms 3 new cases of Wuhan virus; total of 10 infected

Singapore confirms 3 new cases of Wuhan virus : சிங்கப்பூர் வூஹான் கொரோனா வைரஸ் பாதித்த மூன்று புதிய நபர்களை (ஜன. 29) உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மூன்று நபர்களும் வூஹானில் இருந்து பயணம் செய்த சீன நாட்டவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் சமுதாய மக்கள் யாரும் வைரஸ் தொற்றில் பாதிக்கப்படவில்லை என்பதையும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 2 புதிய நபர்களுக்கு வூஹான் வைரஸ்; மொத்த எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..!

இதில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள், 56 வயதான ஒரு பெண் மற்றும் 56 வயதான ஆடவர், இருவரும் திருமண தம்பதிகள்.

மேலும், இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி சிங்கப்பூர் வந்துள்ளனர், தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர்…!

அடுத்து பத்தாவதாக உறுதிப்படுத்தப்பட்ட 56 வயதான நபர், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி சிங்கப்பூர் வந்துள்ளார். இவரும் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளார்.